பழனி அருகே 2500 ஆண்டு பழமையான சங்க கால குகை ஓவியங்கள் கண்டுபிடிப்பு

பழனி அருகே 2500 ஆண்டு பழமையான சங்க கால குகை ஓவியங்கள் கண்டுபிடிப்பு !!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள ஆண்டிப்பட்டி மலைக் குகையில் தொல்லியல் துறை ஆய்வாளர் நாராயணமூர்த்தி, டாக்டர் கன்னிமுத்து, பழனிச்சாமி, ராஜா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

அந்த குகையில் சங்க கால தமிழர்கள் சுண்ணாம்பு, மரப்பிசின் மற்றும் மூலிகைகள் கொண்டு வரைந்த ஓவியங்களை கண்டுபிடித்தனர்.

சங்ககால தமிழர்கள் காதலையும், வீரத்தையும் இரண்டு கண்களாக போற்றி வந்த மரபை எடுத்துக்காட்டும் வகையில் குறிஞ்சி நில மக்களின் ஓவியங்கள் வரையப்பட்டிருந்தது. ஓவியத்தில் விழா சடங்கிற்காக பெண்கள் கூட்டமாக பானைகளில் நீர் எடுத்துச் செல்லும் காட்சியும், மற்றொன்றில் ஆண், பெண் தங்கள் குழந்தைகளுடன் கைகோர்த்து மகிழ்ச்சியாக ஆடிப்பாடும் காட்சியும் வரையப்பட்டுள்ளது.

இந்த வகை நடனத்தை தற்போதும் பளியர், புலையர் போன்ற பழங்குடியின மக்கள் இன்று வரை ஆடிவருவது குறிப்பிடத்தக்கது. மேலும் யானை, புலி, முள்ளம்பன்றி போன்ற விலங்குகள், தனி மனித ஆண், பெண் வேட்டை ஓவியங்கள், யானையை அகலிவெட்டி பிடிப்பது, ஆண்கள் அங்குசம் கொண்டு யானையை அடக்கும் காட்சி, பழக்கப்பட்ட யானையின் மீது அரசன் அம்பாரி வைத்து அமர்ந்து செல்லும் காட்சி ஆகியவை வரையப்பட்டுள்ளன.

இந்த ஓவியங்கள் சங்க கால இலக்கியமான அகநானூற்றுப்பாடல் 8-ஐ நினைவுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

மற்றொரு ஓவியத் தொகுப்பில் அரசன் பாதுகாப்பு வீரர்களுடன் போருக்கு செல்லும் காட்சியும், சிதறல் ஓவியங்களும் வரையப்பட்டிருந்தன. பாதிக்கும் மேற்பட்ட ஓவியங்கள் மங்கிய நிலையில் அடையாளம் காணமுடியாத நிலையில் இருந்தது.

இந்த குகையில் சங்க கால தமிழ்மக்கள் பயன்படுத்திய பானை ஓடுகள், நகக்குறி ஓடுகள், கருப்பு-சிவப்பு ஓடுகள், பளபளப்பான செம்மை நிற ஓடுகள் ஆகியவையும் கிடைத்துள்ளன.

இந்த குகை 2000 முதல் 3000 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் தொடர்ச்சியான பயன்பாட்டில் இருந்திருக்கலாம் என்று தொல்லியல் துறை ஆய்வாளர் நாராயணன் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments