மாமல்லபுரம் பிரமாண்டப் பாறையின் பின்புலத்தை விளக்கும் அற்புதக் காணொளி !
மாமல்லபுரம் சென்றவர்கள் இந்த பிரமாண்ட பாறையை பார்க்காமல் இருந்திருக்க வாய்ப்பில்லை. இப்பாறையில் எந்த விதமான சிற்பங்களும் வடிவமைக்கப்பட வில்லை. இருப்பினும் இப்பாறைக்கு கிருஷ்ணன் வெண்ணை உருண்டை என்றும் பீமன் பாறை என்றும் ஒரு கதையை பின்னி உள்ளனர் சிலர். உண்மையில் இந்த பாறைக்கும் புராணக் கதைகளுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்று தமிழர்கள் நாம் சொல்லவில்லை, வெளிநாட்டு ஆய்வாளர்கள் அறுதியிட்டு கூறியுள்ளனர்.
இப்பாறையின் உண்மையான பெயர் வான் இறைக் கல் (Stone of the Sky God) என்பதாகும். அதாவது அண்ட வெளியில் இருந்து வந்தவர்கள் இப்பாறையை இந்த இடத்தில் நகர்த்தி வைத்திருக்கலாம் என்று கூறுகிறார் இந்த ஆய்வாளர் . மேலும் நரசிம்மவர்மன் காலத்திற்கு முன்பே இந்தக் கல் இங்கு நடப்பட்டுள்ளது என்றும் கருதுகிறார். ஏழு யானைகளை கொண்டு இந்த பாறையை கட்டி இழுக்க முயற்சித்தும் ஒரு அங்குலம் கூட இப்பாறை நகரவில்லையாம். ஒரு தாழ்வான மலைப் பகுதியில் புவிஈர்ப்பு விசையை இந்த 250 டன் பெரும்பாறை எதிர்த்து நிற்கிறது என்றால் இதற்கு பின்னுள்ள வரலாற்று அறிவியலை ஆய்வு செய்யும் கடமை தமிழர்களுக்கு உள்ளது.
அதனால் வடநாட்டு புராணங்களை புறந்தள்ளி மாமல்லபுரம் சிற்பங்களையும், துல்லியமான பாறை வட்டங்களையும், இந்த வான் இறைக் கல்லின் தன்மையையும் மீளாய்வு செய்வது காலத்தின் கட்டாயமாகும் என்பதை இந்த காணொளி உணர்த்துகிறது. வரலாற்று ஆர்வலர்கள் அவசியம் பாருங்கள்.
0 Comments