சமணமும் தமிழ்நாடும்!
சந்திரகுப்த மௌரியரின் அரசகுருவாக இருந்த பத்திரபாகு முனிவர் என்பவர் காலத்தில் சமண சமயம் தமிழ்நாட்டிற்கு முதன்முதலாக வந்தது என்பர். இந்தியாவின் வடப்பகுதியிலிருந்து பன்னீராயிரம் சமண முனிவர்களை அழைத்துக்கொண்டு தென்னகம் நோக்கி வந்தார். இவர் மைசூர் அருகேயிருக்கும் சிரவணபௌகொளவில் தம் குழுவுடன் தங்கினார். இவருடைய சீடரான விசாக முனிவர் சோழபாண்டிய நாட்டில் சமணம் பரவ வழிவகை செய்தார். இவ்வாறு இந்திய வடநாட்டிலிருந்து தமிழகம் வந்த சமண சமயம் பற்றி, கதா கோசம் எனும் நூலில் குறிப்புகள் காணப்படுகின்றன. பத்திரபாகு முனிவரின் காலம் கி.மு. 317 முதல் கி.மு. 297 என்பதால் சமணம் தென்னகம் வந்த வரலாறு ஏறத்தாள 2500 காலத்திற்கும் முற்பட்டதாகும்.
அதன்பின் வடநாட்டில் தோன்றிய சமய நெறி என்றாலும், தமிழ்நாட்டில் வேரூன்றி பல நூற்றாண்டுகள் செழிப்புடன் விளங்கியது. தமிழ்நாட்டில், தமிழ் மொழியில், தமிழர் சிந்தனையில் சமணத்தின் பங்கு இணைபிரிக்க முடியாதது. சங்ககாலத்துப் பாடல் ஒன்று இவர்களை 'உண்ணாமையின் உயங்கிய மருங்குல் ஆடாப படிவத்து ஆன்றோர்' என்று குறிப்பிடுகிறது. (அகம் 123)
பாண்டிய மன்னன் நின்றிசீர் நெடுமாறன் காலத்தில் திருஞான சம்மந்தருடன் வாதத்தில் ஈடுபட்ட சமணர்கள், தாங்கள் வாதத்தில் தோற்றால் கழுவேறுவோம் என்று கூறினர். அனல் வாதம், புனல் வாதம் இரண்டிலும் திருஞான சம்பந்தர் வென்றதால் சமணர்கள் கழுவேறினார்கள்.
"சமணத்திற்கும் பெளத்தத்திற்குமிடையில் முரண்பாடு ஏறபட்டதும் புத்தசமயம் தமிழ்நாட்டை விட்டு இலங்கைக்குச் சென்றது. சமணமே தமிழகத்தின் தனிப்பெரும் சமயமாக பல நூற்றாண்டுகள் நிலைபெற்றிருந்தது. சிந்தாந்த ரீதியில் சமணர்களது அறநெறிகள் இன்றுவரை தமிழ்நாட்டில் ஆதிக்கம் பெற்றுள்ளன... தமிழக மக்கள் சிந்தனையில் சமண அறநெறிகள் உள்ளன."
தேவகோட்டையில் வாழ்ந்த மக்களிடம் சமன சமயத்தை பரப்ப வந்த சமன துறவிகளை தேவகோட்டை மன்னன் விரட்டியதால் உயிருக்கு பயந்து தற்பொதுள்ள சித்தன்னவாயில் என்னும் ஊரில் உள்ள ஒரு பாறையில் தஞ்சம் புகுந்தனர். அங்கு அவர்கள் ஓய்வு நேரத்தில் வரைந்த சமண துறவி ஒவியங்களே தற்போதுள்ள உலக புகழ் பெற்ற சித்தன்னவாசல் ஓவியங்கள் ஆகும்.
0 Comments